வியாழன், 9 ஆகஸ்ட், 2018

ஹிந்தி மெய் எழுத்துக்கள்- ச வரிசை

இன்று ஹிந்தி மெய் எழுத்துக்களில் "ச வரிசை" எழுத்துக்களைக் கற்றுக் கொள்வோம்.



ச வரிசையிலும், முதல் எழுத்து சாதாரண ஓசை, இரண்டாவது எழுத்து சாதாரண ஓசையுடன் கூடிய காற்றோசை, மூன்றாவது எழுத்து அழுத்தமான ஓசை, நான்காவது எழுத்து அழுத்தமான ஓசையுடன் கூடிய காற்றோசை, ஐந்தாவது எழுத்து நாசிக ஓசை.

                   च இது ச வரிசையின் முதல் எழுத்து. இது "சக்கரம்-CHAKKARAM",  "சிக்கன்-CHICKEN" என்பதின் ஆரம்பத்தில் உள்ள "ச" வைப்போல உச்சரிக்கபடுகிறது.
           च - ச - CHA
தமிழில் உள்ள ச வுக்கும் ஹிந்தி ச வுக்கும்  வேறுபாடு என்னவென்றால், தமிழ் "ச" வானது வார்த்தையின் ஆரம்பத்தில் SA என்றும் வார்த்தையின் நடுவே CHA என்றும் உச்சரிக்கப்படுகிறது.
சத்தியம், சாரல், சுரைக்காய், சூரியன், சேலை போன்ற வார்த்தைகளில், "ச" ஆரம்பத்தில் வரும் போது SA என்றும்,
 அச்சம், மச்சம், இச்சை, நிச்சயம், லட்சியம் போன்ற வார்த்தைகளில் "ச" வார்த்தையின் நடுவே வருவதால் CHA என்று உச்சரிக்கப்படுகிறது.
             ஹிந்தியில் இவ்வாறு இல்லை. च என்றால் CHA என்று ஒரே ஒரு உச்சரிப்பு மட்டுமே. எந்த குழப்பமும் இல்லை.
              இப்போது च வில் சில வார்த்தைகளைக் காண்போம்.
चम्मच - ச1ம்மச்1-CHAMMACH - கரண்டி - SPOON
पाँच - பா1ஞ்ச்1 - PAANCH - ஐந்து - FIVE
चाता - சா1தா1 - CHAATHAA - குடை - UMBRELLA
बच्चा - ப3ச்1சா1 - BACHCHAA - குழந்தை
அடுத்த எழுத்து छ. இது च வின் ASPIRATED VERSION- காற்றோசை வடிவம்.  காற்றோசை எழுத்துக்கள், அதன் உச்சரிப்பு பற்றி முன்பே பார்த்துள்ளோம்.
छ என்னும் எழுத்தை சில வார்த்தைகளில் பார்ப்போம்.
 छार - சார்- CHAAR- நான்கு


அடுத்த எழுத்து ज. இது "ஜன்னல்", "ஜான்" என்பதில் உள்ள "ஜ" வைப்போல உச்சரிக்கப்படுகிறது.
जाना - ஜானா - JAANAA - GOING - செல்லுதல்

ச வரிசையில் நான்காவது எழுத்து झ. இது ज வின் கஆற்றோசை வடிவம். இதை JHA உச்சரிப்புடன் காற்று வெளிப்படுமாறு உச்சரிக்க வேண்டும்.


ञ இது च வரிசையின் நாசிக ஓசையாகும். (NASAL SOUND)
தமிழில் இதற்கு இணையான எழுத்து "ஞ". ச வரிசையின் நான்கு எழுத்துக்களுக்கும் இது இன எழுத்தாகும்.
இந்த எழுத்தையும் பெரும்பாலும் வார்த்தைகளில் காண்பது அரிது.

3 கருத்துகள்:

  1. Hello sir,
    I am jothi. I am a studing Hindi (Praveen). "உங்க தமிழ் வழி hindi" ennaku ரொம்ப useful ah இருந்தது.. இதே போல Hindi grammar, Hindi vecablory improve pannara மாதிரி இருக்கா சிர். any other hindi class edukurengala .

    பதிலளிநீக்கு