अं अँ अः இந்த மூன்றும் உயிர் எழுத்துக்கள் கிடையாது. இவை ஓசையைக் குறிக்கும் குறியீடுகள் மட்டுமே. இந்த ஓசைகளைக் குறிப்பிட முதல் உயிர் எழுத்தான अ வுடன் இந்தக் குறியீடுகள் இடப்பட்டுக் காட்டப்படுகிறது. அகராதியில் இந்த ஓசைகள் உயிர் எழுத்துகளுக்குப் பின் வருவதால் இவை பொதுவாக உயிர் எழுத்துக்களுடன் சேர்த்து எழுதப்படுகிறது. ஆனால் இவை உயிர் எழுத்துக்கள் கிடையாது, நாசிக ஓசை மற்றும் ஹ ஓசையின் குறியீடுகள் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த இரண்டு குறியீடுகளும் ஹிந்தியில் நாசிக ஓசையைக் குறிக்கப் பயன்படுகிறது. நாசி என்றால் மூக்கு என்பது நாம் அறிந்ததே. நாசிக ஓசை என்பது "நாசி" அதாவது "மூக்கு" மூலம் எழுப்பப்படும் ஓசை ஆகும். குரல்வளையில் இருந்து வரும் காற்றைத் தடுத்து நாசி வழியே அனுப்புவதால் நாசிக ஓசை பிறக்கிறது.
நாசிக ஓசை
ஓர் உயிரெழுத்தின் மீது இந்தக் குறியீடுகள் இடப்படும் போது, அந்த உயிரெழுத்து நாசிக ஓசை பெறும்.
இந்த நாசிக ஓசையானது நம் பேச்சு வழக்கு தமிழில் பெருமளவில் உபயோகத்தில் உள்ளது. ஆனால் இதைக் குறிப்பிட தமிழில் எழுத்துக்களோ குறியீடுகளோ இல்லை.
இந்த நாசிக ஓசை என்பது என்ன என்று இனி பார்ப்போம்.
தமிழில் எழுத்து வழக்கு மொழிக்கும் பேச்சு வழக்கு மொழிக்கும் உள்ள வித்யாசமே இந்த நாசிக ஓசை தான்.
எழுத்து வழக்கில் நாசிக ஓசைகள் இல்லாமல் செந்தமிழில் எழுதுகிறோம், பேச்சு வழக்கில் செந்தமிழ்ச் சொற்களுடன் நாசிக ஓசை சேர்த்து பேசுகிறோம்.
"உன் பெயர் என்ன?" என்று தமிழில் எழுத்து வழக்கில் எழுதுகிறோம். ஆனால் பேசும் போது?
"ஊன் பேரு என்ன?" என்று தான் கேட்கிறோம்.
இரண்டு வழக்கிலும் "உன்" என்னும் வார்த்தையை மட்டும் கவனியுங்கள். "உன்" என்னும் வார்த்தையின் உச்சரிப்பு எப்படி மாறுகிறது என்பதைக் கவனியுங்கள், குறிப்பாக "உன்" என்னும் வார்த்தை "ஊன்" என மாறும்போது அந்த வார்த்தையின் முடிவில் உச்சரிப்பைக் கவனியுங்கள். பேச்சு வழக்கை "ஊன் பேரு என்ன? என எழுதினாலும் "ஊன்" என்னும் வார்த்தையில் "ன்" முழுமையாக உச்சரிக்கப் படுவதில்லை. ஊ~ பேரு என்ன என்றுதான் உச்சரிக்கப்படுகிறது.
இதேபோலவே "ஏன்?" என்னும் வார்த்தை எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் எப்படி உச்சரிக்கப்படுகிறது என உற்று நோக்குங்கள். எழுத்து வழக்கில் "ஏன்" என்பதில் "ன்" முழுமையாக உச்சரிக்கப்படுகிறது. பேச்சு வழக்கில் "ஏ~" என "ன்" முழுமையாக உச்சரிக்கப்படாமல், "ன்" என்ற எழுத்தின் ஓசை மாறுபட்ட ஓசையாக உச்சரிக்கப்படுகிறது. இந்த ஓசையே நாசிக ஓசையாகும். மீண்டும் உச்சரித்துப் பாருங்கள். இந்த ஓசையின் போது காற்று நாசி வழியே செல்வது தெரியும்.
தமிழில் நாம் பேச்சு வழக்கில் உபயோகிக்கும் பெரும்பாலான வார்த்தைகள் இந்த நாசிக ஓசை கொண்டவையே. "ஆம்" என்பதை நாம் பேச்சு வழக்கில் சொல்லும் "ஆன்"
பேச்சி வழக்கில் நாம் சொல்லும் "ஏன்" = ஏ+நாசிக ஓசை
பேச்சு வழக்கில் உன் (ஊன்)= ஊ+நாசிக ஓசை.
இந்த நாசிக ஓசையை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். ஹிந்தியில் இந்த ஓசை மிக முக்கியம். ஹிந்தியில் முக்கியமான பல வார்த்தைகளில் இந்த நாசிக ஓசை உள்ளது. எனவே சரியாக ஹிந்தி பேச, இந்த நாசிக ஓசையை சரியாக உச்சரிக்கக் கற்றுக் கொள்வது அவசியம்.
இனி ஹிந்தியில் நாசிக ஓசை கொண்ட சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
हाँ - ஹான்- Haan - ஆம்.
தமிழில் நாசிக ஓசையைக் குறிப்பிட குறியீடு எதுவும் இல்லையென்பதால், हाँ என்பதை தமிழில் "ஹான்" எனக் குறிப்பிட்டுள்ளேன். இங்கு ஹான் என்பது ஹா+நாசிக ஓசை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
मैं - மெய்ன்- Mein - நான்
என்பதை "மைன்" என உச்சரிக்கக் கூடாது. ஹிந்தியில் ஐ ஓசை இல்லை, ஹிந்தியில் இருப்பது "எய்" ஓசையென முன்பே கூறியிருக்கிறேன். இதை மெய்ன் -Mein என்றுதான் உச்சரிக்க வேண்டும். மைன் என உச்சரிக்கக் கூடாது.
आँसू - ஆன்சூ - Aansuu - கண்ணீர்
முதல் இரண்டு வார்த்தைகளில் இறுதியில் நாசிக ஓசை இருந்தது. இந்த வார்த்தையில் நடுவே, அதாவது आ வுக்கும் सू வுக்கும் இடையே நாசிக ஓசை உள்ளது.
தமிழில் ஆன்சூ என எழுதி இருப்பதால், ஆன்சூ எனப் படிக்கக் கூடாது. நாசிக ஓசையைக் குறிக்கவே "ன்" இடப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அனுஸ்வர் சந்த்ரபிந்து இரண்டு குறியீடுகளுமே நாசிக ஓசையைத் தான் குறிக்கும் என முன்பே கூறினேன். ஹிந்தி வார்த்தைகளைப் படிக்கும் போது ஓர் எழுத்தின் மேல் அனுஸ்வர் அல்லது சந்த்ரபிந்துவைப் பார்த்தால், நாசிக ஓசையோடு உச்சரிப்பீர்கள். எழுதும் போது தான் குழப்பம் வரும், எங்கு அனுஸ்வர் இடுவது, எங்கு சந்த்ரபிந்து இடுவது என்று.
மிகவும் எளிதானதே. நாசிக ஓசை சேர்க்க வேண்டிய எழுத்தின் கோட்டின் மேலே ஏதனும் இருந்தால் வெறும் புள்ளி மட்டும் (அனுஸ்வர்) இட வேண்டும். கோட்டின் மேலே எதுவும் இல்லையெனில் பிறை போட்டு புள்ளி இட வேண்டும்.(சந்த்ரபிந்து)
हाँ आँसू என்பதில் முதல் எழுத்தின் கோட்டிற்கு மேலே எதுவும் இல்லை, வெறும் புள்ளி இட்டால் தெரியாமல் போகும். எனவே புள்ளியைக் காட்ட புள்ளிக்குக் கீழே பிறை இடப்படுகிறது. அதுவே சந்த்ரபிந்து.
मैं என்பதில் கோட்டிற்கு மேலே ஏற்கெனவே கோடுகள் உள்ளதால் பிறை போட இடம் இல்லை. எனவே வெறும் புள்ளி மட்டும் இடப்படுகிறது.
இது மென்மையான ஓசை கொண்டது. "ஃ" கடினமான ஓசை கொண்டது.
இதன் உச்சரிப்பை எளிமையாக விளக்க வேண்டுமானால் கேளுங்கள். உங்களுக்கு "ஸ்வாஹா" சொல்லத் தெரியுமா? பிராமணர்கள், பூசாரிகள் மந்திரம் ஓதுவதைக் கேட்டிருக்கிறீர்களா? நீங்கள் ஏதேனும் மந்திரம் படித்திருக்கிறீர்களா? மந்திரத்தின் முடிவில் " ஸ்வாஹா" என்று சொல்வார்கள் அல்லவா. அந்த ஸ்வாஹ வில் இறுதியில் இருப்பது இந்த ः குறியீடுதான். ( स्वाः - ஸ்வாஹா)
விசர்கம் "ஹ" என்பதைப் போன்ற ஓசை கொண்டது. ஆனால் இது தனக்கு முன்பு உள்ள உயிரெழுத்தின் ஓசையைப் பெறும். இது பெரும்பாலும் வார்த்தையின் இறுதியில் தான் வரும்.
स्वाः என்பதில் இறுதியில் உள்ள ः உள்ளது, அதன் முன்பு உள்ள உயிரெழுத்து ஆ-आ (வ்+ஆ=வா - व+आ =वा), எனவே ः ஆனது ஹ்+ஆ= ஹா என்னும் ஓசையை பெறும். (ஹ்+ முன்பு உள்ள உயிரெழுத்தின் ஓசை) எனவே ஸ்வாஹா என்னும் உச்சரிப்பு வந்தது.
சமஸ்கிருதத்தில் இருந்து வந்த வார்தைகளில் மட்டுமே இந்தக் குறியீடு இருக்கும். பொதுவாக ஹிந்தியில் இந்தக் குறியீட்டின் உபயோகம் மிகக் குறைவுதான்.
இன்றைய பாடம் இத்தோடு முடிகிறது. இன்றைய பாடம் உங்களுக்குப் புரிந்தாலோ, புரியவில்லையென்றாலோ, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ Comment செய்யுங்கள்.
நாசிக ஓசை:
ं இந்தக் குறியீடு अनुसवर-அனுஸ்வர் எனவும் ँ இது चँद्रबिंदु - சந்த்ரபிந்து எனவும் அழைக்கப்படும்.இந்த இரண்டு குறியீடுகளும் ஹிந்தியில் நாசிக ஓசையைக் குறிக்கப் பயன்படுகிறது. நாசி என்றால் மூக்கு என்பது நாம் அறிந்ததே. நாசிக ஓசை என்பது "நாசி" அதாவது "மூக்கு" மூலம் எழுப்பப்படும் ஓசை ஆகும். குரல்வளையில் இருந்து வரும் காற்றைத் தடுத்து நாசி வழியே அனுப்புவதால் நாசிக ஓசை பிறக்கிறது.
நாசிக ஓசை
ஓர் உயிரெழுத்தின் மீது இந்தக் குறியீடுகள் இடப்படும் போது, அந்த உயிரெழுத்து நாசிக ஓசை பெறும்.
இந்த நாசிக ஓசையானது நம் பேச்சு வழக்கு தமிழில் பெருமளவில் உபயோகத்தில் உள்ளது. ஆனால் இதைக் குறிப்பிட தமிழில் எழுத்துக்களோ குறியீடுகளோ இல்லை.
இந்த நாசிக ஓசை என்பது என்ன என்று இனி பார்ப்போம்.
தமிழில் எழுத்து வழக்கு மொழிக்கும் பேச்சு வழக்கு மொழிக்கும் உள்ள வித்யாசமே இந்த நாசிக ஓசை தான்.
எழுத்து வழக்கில் நாசிக ஓசைகள் இல்லாமல் செந்தமிழில் எழுதுகிறோம், பேச்சு வழக்கில் செந்தமிழ்ச் சொற்களுடன் நாசிக ஓசை சேர்த்து பேசுகிறோம்.
"உன் பெயர் என்ன?" என்று தமிழில் எழுத்து வழக்கில் எழுதுகிறோம். ஆனால் பேசும் போது?
"ஊன் பேரு என்ன?" என்று தான் கேட்கிறோம்.
இரண்டு வழக்கிலும் "உன்" என்னும் வார்த்தையை மட்டும் கவனியுங்கள். "உன்" என்னும் வார்த்தையின் உச்சரிப்பு எப்படி மாறுகிறது என்பதைக் கவனியுங்கள், குறிப்பாக "உன்" என்னும் வார்த்தை "ஊன்" என மாறும்போது அந்த வார்த்தையின் முடிவில் உச்சரிப்பைக் கவனியுங்கள். பேச்சு வழக்கை "ஊன் பேரு என்ன? என எழுதினாலும் "ஊன்" என்னும் வார்த்தையில் "ன்" முழுமையாக உச்சரிக்கப் படுவதில்லை. ஊ~ பேரு என்ன என்றுதான் உச்சரிக்கப்படுகிறது.
இதேபோலவே "ஏன்?" என்னும் வார்த்தை எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் எப்படி உச்சரிக்கப்படுகிறது என உற்று நோக்குங்கள். எழுத்து வழக்கில் "ஏன்" என்பதில் "ன்" முழுமையாக உச்சரிக்கப்படுகிறது. பேச்சு வழக்கில் "ஏ~" என "ன்" முழுமையாக உச்சரிக்கப்படாமல், "ன்" என்ற எழுத்தின் ஓசை மாறுபட்ட ஓசையாக உச்சரிக்கப்படுகிறது. இந்த ஓசையே நாசிக ஓசையாகும். மீண்டும் உச்சரித்துப் பாருங்கள். இந்த ஓசையின் போது காற்று நாசி வழியே செல்வது தெரியும்.
தமிழில் நாம் பேச்சு வழக்கில் உபயோகிக்கும் பெரும்பாலான வார்த்தைகள் இந்த நாசிக ஓசை கொண்டவையே. "ஆம்" என்பதை நாம் பேச்சு வழக்கில் சொல்லும் "ஆன்"
பேச்சி வழக்கில் நாம் சொல்லும் "ஏன்" = ஏ+நாசிக ஓசை
பேச்சு வழக்கில் உன் (ஊன்)= ஊ+நாசிக ஓசை.
இந்த நாசிக ஓசையை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். ஹிந்தியில் இந்த ஓசை மிக முக்கியம். ஹிந்தியில் முக்கியமான பல வார்த்தைகளில் இந்த நாசிக ஓசை உள்ளது. எனவே சரியாக ஹிந்தி பேச, இந்த நாசிக ஓசையை சரியாக உச்சரிக்கக் கற்றுக் கொள்வது அவசியம்.
இனி ஹிந்தியில் நாசிக ஓசை கொண்ட சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
हाँ - ஹான்- Haan - ஆம்.
தமிழில் நாசிக ஓசையைக் குறிப்பிட குறியீடு எதுவும் இல்லையென்பதால், हाँ என்பதை தமிழில் "ஹான்" எனக் குறிப்பிட்டுள்ளேன். இங்கு ஹான் என்பது ஹா+நாசிக ஓசை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
मैं - மெய்ன்- Mein - நான்
என்பதை "மைன்" என உச்சரிக்கக் கூடாது. ஹிந்தியில் ஐ ஓசை இல்லை, ஹிந்தியில் இருப்பது "எய்" ஓசையென முன்பே கூறியிருக்கிறேன். இதை மெய்ன் -Mein என்றுதான் உச்சரிக்க வேண்டும். மைன் என உச்சரிக்கக் கூடாது.
आँसू - ஆன்சூ - Aansuu - கண்ணீர்
முதல் இரண்டு வார்த்தைகளில் இறுதியில் நாசிக ஓசை இருந்தது. இந்த வார்த்தையில் நடுவே, அதாவது आ வுக்கும் सू வுக்கும் இடையே நாசிக ஓசை உள்ளது.
தமிழில் ஆன்சூ என எழுதி இருப்பதால், ஆன்சூ எனப் படிக்கக் கூடாது. நாசிக ஓசையைக் குறிக்கவே "ன்" இடப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அனுஸ்வர் சந்த்ரபிந்து இரண்டு குறியீடுகளுமே நாசிக ஓசையைத் தான் குறிக்கும் என முன்பே கூறினேன். ஹிந்தி வார்த்தைகளைப் படிக்கும் போது ஓர் எழுத்தின் மேல் அனுஸ்வர் அல்லது சந்த்ரபிந்துவைப் பார்த்தால், நாசிக ஓசையோடு உச்சரிப்பீர்கள். எழுதும் போது தான் குழப்பம் வரும், எங்கு அனுஸ்வர் இடுவது, எங்கு சந்த்ரபிந்து இடுவது என்று.
மிகவும் எளிதானதே. நாசிக ஓசை சேர்க்க வேண்டிய எழுத்தின் கோட்டின் மேலே ஏதனும் இருந்தால் வெறும் புள்ளி மட்டும் (அனுஸ்வர்) இட வேண்டும். கோட்டின் மேலே எதுவும் இல்லையெனில் பிறை போட்டு புள்ளி இட வேண்டும்.(சந்த்ரபிந்து)
हाँ आँसू என்பதில் முதல் எழுத்தின் கோட்டிற்கு மேலே எதுவும் இல்லை, வெறும் புள்ளி இட்டால் தெரியாமல் போகும். எனவே புள்ளியைக் காட்ட புள்ளிக்குக் கீழே பிறை இடப்படுகிறது. அதுவே சந்த்ரபிந்து.
मैं என்பதில் கோட்டிற்கு மேலே ஏற்கெனவே கோடுகள் உள்ளதால் பிறை போட இடம் இல்லை. எனவே வெறும் புள்ளி மட்டும் இடப்படுகிறது.
ः
இது "விசர்கம்- विसर्ग" எனப்படும். இந்தக் குறியீட்டை தமிழில் உள்ள "ஃ" ஓடு ஒப்பிட்டு சிலர் கூறுவர். எனினும் இது "ஃ" போன்ற உச்சரிப்பு கொண்டதல்ல.இது மென்மையான ஓசை கொண்டது. "ஃ" கடினமான ஓசை கொண்டது.
இதன் உச்சரிப்பை எளிமையாக விளக்க வேண்டுமானால் கேளுங்கள். உங்களுக்கு "ஸ்வாஹா" சொல்லத் தெரியுமா? பிராமணர்கள், பூசாரிகள் மந்திரம் ஓதுவதைக் கேட்டிருக்கிறீர்களா? நீங்கள் ஏதேனும் மந்திரம் படித்திருக்கிறீர்களா? மந்திரத்தின் முடிவில் " ஸ்வாஹா" என்று சொல்வார்கள் அல்லவா. அந்த ஸ்வாஹ வில் இறுதியில் இருப்பது இந்த ः குறியீடுதான். ( स्वाः - ஸ்வாஹா)
விசர்கம் "ஹ" என்பதைப் போன்ற ஓசை கொண்டது. ஆனால் இது தனக்கு முன்பு உள்ள உயிரெழுத்தின் ஓசையைப் பெறும். இது பெரும்பாலும் வார்த்தையின் இறுதியில் தான் வரும்.
स्वाः என்பதில் இறுதியில் உள்ள ः உள்ளது, அதன் முன்பு உள்ள உயிரெழுத்து ஆ-आ (வ்+ஆ=வா - व+आ =वा), எனவே ः ஆனது ஹ்+ஆ= ஹா என்னும் ஓசையை பெறும். (ஹ்+ முன்பு உள்ள உயிரெழுத்தின் ஓசை) எனவே ஸ்வாஹா என்னும் உச்சரிப்பு வந்தது.
சமஸ்கிருதத்தில் இருந்து வந்த வார்தைகளில் மட்டுமே இந்தக் குறியீடு இருக்கும். பொதுவாக ஹிந்தியில் இந்தக் குறியீட்டின் உபயோகம் மிகக் குறைவுதான்.
இன்றைய பாடம் இத்தோடு முடிகிறது. இன்றைய பாடம் உங்களுக்குப் புரிந்தாலோ, புரியவில்லையென்றாலோ, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ Comment செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக