ஹிந்தி உயிரெழுத்துக்கள் கற்றுக் கொண்டு விட்டோம்.
இனி ஹிந்தியில் உள்ள மெய் எழுத்துகளைக் கற்போம்.
ஹிந்தியில் மெய் எழுத்துக்கள் "व्यंजन अक्षर" - VYANJAN AKSHAR-வ்யஞ்சன் அக்ஷர் என்று அழைக்கப்படும். அக்ஷர் என்றால் எழுத்து என்று அர்த்தம். உயிர் எழுத்துக்கள் "ஸ்வர் அக்ஷர் என்று அழைக்கப்படும்.
தமிழ் மெய்யெழுத்து வரிசை போலவே ஹிந்தியிலும் எழுத்துக்கள் பிறக்கும் இடத்தைப் பொறுத்து வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. தமிழில் 18 மெய் எழுத்துக்கள் மட்டுமே உள்ளன. ஆனால் ஹிந்தியில் 33 மெய் எழுத்துக்கள் உள்ளன.
ஹிந்தியில் க வரிசை ச வரிசை ட வரிசை த வரிசை ப வரிசை என ஐந்து வரிசை, ஒவ்வொரு வரிசையிலும் ஐந்து எழுத்துக்களும்,
நான்கு இடையின எழுத்துக்களும்,
காற்றெழுத்துக்கள் நான்கும்
என மொத்தம் 33 எழுத்துக்கள் உள்ளன.
க வரிசை எழுத்துக்கள் தொண்டையிலிருந்து பிறக்கும். இவை ஆங்கிலத்தில் GUTTURALS அல்லது VELAR CONSONANTS என அழைக்கப்படும். இதில் ஐந்து எழுத்துக்கள் உள்ளன.
"ச" வரிசை எழுத்துக்கள் அண்ணத்தில்(PALATE) இருந்து பிறக்கும். எனவே இவை PALATAL CONSONANTS என அழைக்கப்படும்.
"ட" வரிசை எழுத்துக்கள் நுனி நாக்கு மற்றும் அண்ணத்தில் தோன்றும். இவை RETROFLEX CONSONANTS என்று அழைக்கப்படும்.
"த" வரிசை எழுத்துக்கள் நுனி நாக்கு மேற்பல்லோடு பொருந்துவதால் தோன்றுகிறது. பற்களில் தோன்றுவதால் இவை DENTAL CONSONANTS என அழைக்கப்படும்.
"ப" வரிசை எழுத்துக்கள் மேல் கீழ் உதடுகள் பொருந்துவதால் தோன்றுகிறது. உதடுகளில் தோன்றுவதால் இவை LABIAL CONSONANTS என்று அழைக்கப்படுகிறது.
தமிழில் மெய் எழுத்தில் ஒரு "க" ஒரு "ச" ஒரு "ட" மட்டுமே உள்ளது. ஆனால் ஹிந்தியில் 4 வித "க" உள்ளன.
தமிழர்களுக்கு ஹிந்தி பற்றி பயத்தை உண்டாக்குவதில் இதுவும் ஒன்று. நமக்கு ஒரு க தானே தெரியும், Ka, Kha, Ga, Gha என்று நான்கு க எப்படி வந்தது அதை எப்படி உச்சரிப்பது என்று குழப்பம் உண்டாகிவிடுகிறது
தமிழில் ஒரு "க" இருந்த போதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட க ஓசைகள் தமிழில் உள்ளன.
இதைப் புரிந்து கொண்டாலே போதும் ஹிந்தியில் உள்ள நான்கு நான்கு எழுத்துக்கள் பற்றிய பயம் நீங்கி தெளிவு உண்டாகிவிடும்.
"கண்" என்னும் தமிழ் வார்த்தையை உச்சரித்துப் பாருங்கள்.
Kan என்றுதான் உச்சரிக்கிறோம். அதாவது ஆங்கில Ka க்கு உண்டான ஓசையில்தான் உச்சரிக்கிறோம். இதுவே சாதாரண "க" ஆகும்.(முதல் க) இதை உச்சரிக்க எந்த முயற்சியும் தேவை இல்லை.
இப்போது "கங்கா" என்னும் வார்த்தையை உச்சரித்துப் பாருங்கள்.
Ganga என்று தான் உச்சரிப்பீர்கள், Kanga என்று உச்சரிக்க மாட்டீர்கள்.
இதுபோலவே கணேஷ் என்னும் வார்த்தையை உச்சரித்துப் பாருங்கள். "க" வை தொண்டையில் அழுத்தம் கொடுத்து "GA"NESH என்று தான் உச்சரிப்போம்.
அங்கே இங்கே போன்ற வார்த்தைகளை உச்சரித்துப் பாருங்கள். அதிலுள்ள "ங்" கை அடுத்து வரும் "க" வானது அழுத்தமான க ஓசையில் (GA) தான் உச்சரிக்கிறோம். நாம் சாதாரண க ஓசையில் உச்சரிக்க முயற்சித்தாலும் இயலாது, முயற்சி செய்து பாருங்கள்.
ANKE என்று உச்சரித்துப் பாருங்கள். ANGE என்று தான் வரும். அதுதான் இயல்பான உச்சரிப்பு. ANKE என்று உச்சரிப்பது இயல்பாக தானாக ஓடும் நீரை நாம் தடுத்து நிறுத்துவது போல தோன்றும்.
தமிழ் சமஸ்கிருதம் போன்ற மொழிகள், நீர் போல இயல்பாக ஓடும் உச்சரிப்பு கொண்டவை, அதன் அடிப்படையிலேயே எழுத்துக்கள் உச்சரிப்பும் வார்த்தைகள் புணர்ச்சியும் இயல்பாக ஓடுவது போலவே இருக்கும்.
நாசிக மெய்யை அடுத்து (ங்) வரும் வல்லின எழுத்து (க) அழுத்தமான ஓசையுடன்(GA) தான் வரும் என பழங்கால தமிழ் இலக்கண நூலகளில் விதியே உள்ளது. தமிழில்
இதிலிருந்து "க" விற்கு இயல்பான(சாதாரணமான) உச்சரிப்பு ஒன்று(KA), அழுத்தமான உச்சரிப்பு ஒன்று(GA) உள்ளது என்பது புரிகிறது.
எனவே தமிழில் உள்ள "க" என்னும் எழுத்திற்கு "KA" "GA" என்று இரண்டு உச்சரிப்பு உள்ளது தெளிவு.
இதேபோலவே "தம்பி" "தண்ணீர்" என்பதில் உள்ள "த" சாதாரண "த-Tha" ஆகும். ஆனால் "தர்மம்" "தயவு" என்பதை உச்சரித்துப் பாருங்கள். "Dha" என்னும் உச்சரிப்பு தான் வரும். தம்பி-THAMBI, தண்ணீர்-THANNEER, தர்மம்- DHARMAM, தயவு-DHAYAVU
மேலும் "பழம்" "பல்" என்பதில் உள்ள "ப" சாதரண "ப-Pa", ஆனால் பலம், பலசாலி ஆகிய வார்த்தைகளில் உள்ள "ப" வை "Ba" என்று தான் உச்சரிக்கிறோம். பலம்-BALAM, பலசாலி-BALASALI
இவ்வாறு
"க" விற்கு Ka மற்றும் Ga
"ச" விற்கு Cha மற்றும் Ja
"ட" விற்கு Ta மற்றும் Da
"த" விற்கு Tha மற்றும் Dha
"ப" விற்கு Pa மற்றும் Ba
என ஒவ்வொரு எழுத்திற்கும் இரண்டு உச்சரிப்பு விளங்கியிருக்கும்.
இதில் முதலிலுள்ளது சாதாரண உச்சரிப்பு, இரண்டாவதாக உள்ளது அழுத்தமான உச்சரிப்பு. சாதாரண உச்சரிப்பு கொண்ட எழுத்துக்களை Unvoiced Consonants என்றும், அழுத்தமான உச்சரிப்பு கொண்ட எழுத்துக்களை Voiced Consonants அழைப்பர்.
(குறிப்பு: தமிழில் ச வின் அழுத்தமான உச்சரிப்பான "JA" விற்கு சில இடங்களில் "ஜ" என்னும் கிரந்த எழுத்தை உபயோகிக்கிறோம், ச வின் அழுத்தமான உச்சரிப்பு வடிவம் தான் ஜ ஆகும். இருந்தாலும் இஞ்சி, பஞ்சம், மஞ்சம் போன்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். இறுதியில் உள்ள "சி"யானது "ஜி" என்றே உச்சரிக்கப்படுகிறது. இஞ்சி- INJI, பஞ்சம்-PANJAM, மஞ்சம், MANJAM. முன்பே சொன்னேன் அல்லவா. தமிழில் நாசிக மெய்யை அடுத்து (ங் ஞ் ண் ந் ம் ) வரும் வல்லின எழுத்து (க ச ட த ப) அழுத்தமான ஓசையுடன்(GA, JA, DA, DHA, BA) தான் வரும் என பழங்கால தமிழ் இலக்கண நூல்களில் விதியே உள்ளது
க ச ட த ப ஆகிய ஒவ்வொரு எழுத்துக்கும் ஹிந்தியில் நான்கு எழுத்துக்கள் உள்ளன என்று பார்தோம் அல்லவா. அவற்றில் இரண்டு எழுத்துக்களில் உச்சரிப்பு பற்றி விளங்கிக் கொண்டிருப்பீர்கள்.
மீதமுள்ள இரண்டு எழுத்துக்களின் உச்சரிப்பு பற்றி இனி பார்ப்போம்.
"காலை" என்ற தமிழ் வார்த்தையை உச்சரித்துப் பாருங்கள்.
இதில் உள்ள "கா" சாதாரண க ஓசை.
இப்போது Coffee-காஃபீ என்ற வார்த்தையை உச்சரித்துப் பாருங்கள்.
முதலில் சொன்ன "கா" வுக்கும் இதில் உள்ள "கா" வுக்கும் வித்தியாசம் தெரிகிறதா?
மீண்டும் சில முறை உச்சரித்துப் பாருங்கள், புரியும்.
"காலை" என்பதில் உள்ள "கா" எந்த முயற்சியும் இல்லாமல் வரும் சாதாரண "கா".
ஆனால் Coffee யில் உள்ள "கா" சிறிது முயற்சியுடன், சிறிது அதிக காற்றுடன் உச்சரிக்கப்படும். அதாவது "க்காஃபீ" என்று உச்சரிக்கப்படும். "க்கா" என்பதை "இக்கா" என உச்சரிக்காமல் "க்"-கை மிகக் குறைந்த நேரம்(கால் மாத்திரைக்கும் குறைவான நேரம்) ஒலிக்கும்போது அதிக காற்றுடன் "க" ஓசை பிறக்கும். இவ்வாறு ஓர் மெய் எழுத்தை அதிக காற்றுடன் உச்சரிப்பதை ஆங்கிலத்தில் Aspiration என்றும் அந்த எழுத்தை Aspirated Consonant என்றும் அழைப்பர்.
தமிழில் காற்றோசை எழுத்துக்கள் என அழைக்கலாம்.
ஒவ்வொரு வரிசையிலும் உள்ள இரண்டாவது மற்றும் நான்காவது எழுத்துக்கள், அதன் முந்தைய எழுத்தின் காற்றோசை வடிவம் ஆகும்.
அதாவது முதல் எழுத்து சாதரண ஓசை, இரண்டாவது சாதாரண ஓசையுடன் காற்றோசை, மூன்றாவது ஓசை அழுத்தமான ஓசை, நான்காவது எழுத்து அழுத்தமான ஓசையுடன் சேர்ந்த காற்றோசை.
क + காற்றோசை= ख
ग + காற்றோசை= घ
च + காற்றோசை= छ
ज + காற்றோசை= झ
சாதாரண ஓசையை unvoiced unaspirated என்றும்
சாதாரண ஓசையோடு சேர்ந்த காற்றோசையை Unvoiced Aspirated என்றும்
அழுத்தமான ஓசையை Voiced unaspirated என்றும்
அழுதமான ஓசையோடு சேர்ந்த காற்றோசையை Voiced Aspirated என்றும் ஆங்கிலத்தில் கூறுவர்.
ஹிந்தி மெய் எழுத்துக்களையும் அவற்றின் ஆங்கில இணை ஓசையையும், தமிழ் இணை எழுத்துக்களையும் மேலே உள்ள படத்தில் பார்க்கலாம்
தமிழில் ஒரு "க" எழுத்து மட்டுமே உள்ளதால், ஹிந்தியில் உள்ள, நான்கு "க" வைக் குறிக்க க1, க2, க3, க4 என குறிப்பிடப்படுகிறது.
இதில் க1 என்பது சாதரண க (முதல் க),
க2 என்பது முதல் க வுடன் காற்றோசை சேர்ந்தது. (இரண்டாவது க)
க3 என்பது அழுத்தமான க (மூன்றாவது க)
க4 என்பது மூன்றாவது க வுடன் காற்றோசை சேர்ந்தது. (நான்காவது க)
இதேபோலவே ட வரிசை, த வரிசை, ப வரிசை எழுத்துக்களுக்கும் 1,2,3,4 என எண்கள் குறிப்பிடப்படுகிறது. ச வரிசையின் அழுத்தமான ஓசையான மூன்றாவது ஓசையைக் குறிக்க தமிழில் ஜ என்ற கிரந்த எழுத்தை உபயோகிப்பதால், அந்த வரிசைக்கு மட்டும் ச1 ச2 ச3 ச4 என்பதற்குப் பதிலாக ச1 ச2, ஜ1, ஜ2 எனக் குறிப்பிடுகிறோம்.

ங ஞ ண ந ம ன என ஆறு மெல்லின மெய் எழுத்துக்கள் தமிழில் உள்ளன. இவை முறையே வல்லின எழுத்துக்களுக்கு இன எழுத்துக்களாகும். இதேபோல ஹிந்தியிலும் ஐந்து வரிசை வல்லின எழுத்துக்களுக்கும் இணையான மெல்லின எழுத்துக்கள் ங ஞ ண ந ம உள்ளன(ன வைத் தவிர).
தமிழில் ய ர ல வ ள ழ என ஆறு இடையின எழுத்துக்கள் உள்ளன.
இவற்றில் ய ர ல வ ஆகியவையே உண்மையில் இடையின எழுத்துக்கள். அவை நான்கும் ஹிந்தியில் உள்ளன. ள மற்றும் ழ ஆனது ல வின் ஓசை வேறுபாட்டால் தோன்றுவதாகும். ஹிந்தியில் இவற்றின் உபயோகமில்லையெனினும் இவற்றின் உச்சரிப்பிற்கு இணையான எழுத்துக்கள் உள்ளன. அவை நமக்குத் தேவையில்லை.
ற என்னும் தமிழ் வல்லின எழுத்தானது ட் மற்றும் ர் இணைவால் தோன்றியது. இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை கொண்டது. எகா. கற்பு- சிலர் கர்பு என்றும் சிலர் கட்பு என்றும் உச்சரிப்பர். இங்கு ற் ஆனது, ட் மற்றும் ர் இரண்டிற்கும் இடைப்பட்ட உச்சரிப்பு கொண்டது.
சில இடங்களில் ற் ஆனது ட்+ர் இரண்டும் சேர்ந்த உச்சரிப்பு கொண்டது.
இரண்டிற்கும் இடைப்பட்ட உச்சரிப்பு என்பது வேறு, இரண்டும் சேர்ந்த உச்சரிப்பு என்பது வேறு.
எகா. காற்று= கா ட்+ர் று
ஹிந்தியிலும் இதுபோல இரண்டு எழுத்துக்கள் உள்ளன. அவை ட வரிசையில் மூன்றாவது எழுத்து மற்றும் நான்காவது எழுத்தில் புள்ளி வைத்து எழுதப்படும். அவற்றைப் பின்பு ஒரு பாடத்தில் காண்போம்.
Incomplete.. Will be complete soon

தமிழ்-ஹிந்தி மெய் எழுத்துக்கள் ஒப்பீடு
தமிழில் க ச ட த ப ற என்று ஆறு வல்லின மெய் எழுத்துக்கள் உள்ளன. இவற்றில் ற வைத் தவிர மீதி ஐந்து எழுத்துக்கள் அவற்றின் நான்கு விதமான் ஓசைகளுடன் ஹிந்தியில் உள்ளன.ங ஞ ண ந ம ன என ஆறு மெல்லின மெய் எழுத்துக்கள் தமிழில் உள்ளன. இவை முறையே வல்லின எழுத்துக்களுக்கு இன எழுத்துக்களாகும். இதேபோல ஹிந்தியிலும் ஐந்து வரிசை வல்லின எழுத்துக்களுக்கும் இணையான மெல்லின எழுத்துக்கள் ங ஞ ண ந ம உள்ளன(ன வைத் தவிர).
தமிழில் ய ர ல வ ள ழ என ஆறு இடையின எழுத்துக்கள் உள்ளன.
இவற்றில் ய ர ல வ ஆகியவையே உண்மையில் இடையின எழுத்துக்கள். அவை நான்கும் ஹிந்தியில் உள்ளன. ள மற்றும் ழ ஆனது ல வின் ஓசை வேறுபாட்டால் தோன்றுவதாகும். ஹிந்தியில் இவற்றின் உபயோகமில்லையெனினும் இவற்றின் உச்சரிப்பிற்கு இணையான எழுத்துக்கள் உள்ளன. அவை நமக்குத் தேவையில்லை.
ற என்னும் தமிழ் வல்லின எழுத்தானது ட் மற்றும் ர் இணைவால் தோன்றியது. இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை கொண்டது. எகா. கற்பு- சிலர் கர்பு என்றும் சிலர் கட்பு என்றும் உச்சரிப்பர். இங்கு ற் ஆனது, ட் மற்றும் ர் இரண்டிற்கும் இடைப்பட்ட உச்சரிப்பு கொண்டது.
சில இடங்களில் ற் ஆனது ட்+ர் இரண்டும் சேர்ந்த உச்சரிப்பு கொண்டது.
இரண்டிற்கும் இடைப்பட்ட உச்சரிப்பு என்பது வேறு, இரண்டும் சேர்ந்த உச்சரிப்பு என்பது வேறு.
எகா. காற்று= கா ட்+ர் று
ஹிந்தியிலும் இதுபோல இரண்டு எழுத்துக்கள் உள்ளன. அவை ட வரிசையில் மூன்றாவது எழுத்து மற்றும் நான்காவது எழுத்தில் புள்ளி வைத்து எழுதப்படும். அவற்றைப் பின்பு ஒரு பாடத்தில் காண்போம்.
U r host any online classes I mean zoom app classes???
பதிலளிநீக்குஎழுத்துக்கள் புரிந்து கொள்ள இவ்வளவு எளிய முறையில் கற்றுக் கொடுத்த மைக்கு நன்றி.
பதிலளிநீக்குVery super sir
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குvera level
பதிலளிநீக்குஹிந்தி மொழியை பயிற்றுவிக்க முயற்சி எடுத்தமைக்கு மிக்க நன்றி ஆனால் ஹிந்தி எழுத்துக்களின் நான்கு வித உச்சரிப்புகளை தமிழில் விளக்க முற்பட்டு தமிழின் அடிப்படை உச்சரிப்பு முறையை குழப்பி விட்டீர்கள். Ga என்ற உச்சரிப்பிற்கு கங்கை, கணேஷ் என்ற வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை உதாரணம் காட்டி இருக்கிறீர்கள். அது தவறு. (காரணம் அடுத்த பத்தியில் எழுதியுள்ளேன்) இடையில் அல்லது கடைசியில் வரும் உச்சரிப்புக்களை உதாரணம் காட்டலாம். அல்லது ஆங்கில எழுத்துக்களை கொண்டே விளக்கலாம்.
பதிலளிநீக்குதமிழில் ஒரு வார்த்தையின் முதல் எழுத்து வல்லினமாகவும் இடையில் உள்ள அதே எழுத்து மெல்லினமாகவும் உச்சரிக்க வேண்டும். தமிழ் இலக்கணப்படி Kangai என்றும் Kanesh என்றும் குரு என்ற பெயரை Kuru என்றும் உச்சரிப்பதுதான் சரி. ஆனால் இன்றைக்கு அப்படி உச்சரித்தால் எல்லோரும் சிரிப்பார்கள். காரணம் தமிழ் வார்த்தைகளையும், பெயர்களையும் ஆங்கில மொழியில் எழுதி அதையே படித்தும் பழகி விட்டதால் தமிழில் இல்லாத ஒலி அமைப்புகள் தோன்றிவிட்டன. அதே பழக்கத்தில் குழந்தைகள் இன்று குடிசை என்ற வார்த்தையை Gudisai என்றும் கொய்யாப்பழம் என்ற வார்த்தையை Goyyapalam என்றும் வாசிக்கிறார்கள். இதாவது பரவாயில்லை. 'தரகர்' என்ற வார்த்தையை Tharakar என்று வாசிக்கிறார்கள். அப்படி வாசித்தால் பொருள் புரியுமா? 'வணக்கம்', 'இலக்கணம்' என்ற வார்த்தைகளில் இடையில் வரும் 'க' என்ற எழுத்து Ka என்று அழுத்தம் கொடுத்து உச்சரிக்கப்படுவதற்கு காரணம் அங்கே 'க்' என்ற மெய்யெழுத்து சேர்ந்து வருகிறது. தங்களுடைய ஹிந்தி கற்பிக்கும் முயற்சியில் தமிழ் பற்றி எழுதியது பற்றி தவறாக எண்ண வேண்டாம்.
தாய்மொழியின் அடிப்படைகளை சரிவர புரிந்து கொண்டால் வேற்று மொழி பயில்வது சுலபம் என்பதால் எழுதினேன்.
Very good
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்கு