उ
இந்த ஹிந்தியின் ஐந்தாவது உயிரெழுத்தாகும். இந்த எழுத்தின் உச்சரிப்பு தமிழில் உள்ள 'உ' போன்றதாகும். இந்த எழுத்து 'உண்மை' 'உழைப்பு' என்பதில் உள்ள 'உ' போன்று உச்சரிக்கப்படுகிறது.
இதை எழுதுவது ஒன்றும் அவ்வளவு கடினமல்ல. இதை எவ்வாறு எழுதுவது என்று கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.
ஒரு 3 போட்டு அதன் மேல் ஒரு மேற்கோடு போட வேண்டும். அவ்வளவுதான். இதை அழகாக எழுத, 3-இன் முடிவுப்பகுதியை சற்று இடப்புறம் மேல்நோக்கி இழுத்துவிட வேண்டும். 3-இன் ஆரம்பப் பகுதியும் மேற்கோடும் தனித்தனியாகத் தெரியாதவாறு மேற்கோடு போட வேண்டும். இது குழப்புவது போல இருந்தால் விட்டுவிடுங்கள், சில முறை எழுதிப் பார்த்தால் உங்களுக்கே புரிந்துவிடும்.
இப்போது சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
उल्लू - உல்லூ - ஆந்தை
उड़ना - உட்னா - பறத்தல்
उजाला - உஜாலா - பிரகாசம்
उम्मीद - உம்மீத் - நம்பிக்கை
இந்த வார்த்தைகளின் ஆரம்பத்தில் उ உள்ளதைக் காண முடிகிறதா..
उ என்னும் எழுத்து மற்ற மெய் எழுத்துக்களோடு சேரும்போது அதனோடு 'ु' என்னும் குறியீடு சேர்க்க வேண்டும். இந்தக் குறியீடானது எழுத்தின் கீழ்ப்பகுதியில் இட வேண்டும். இதை எவ்வாறு எழுத வேண்டும் என்பது படத்தில் காட்டப்பட்டுள்ளது.
மெய் எழுத்தை எழுதிய பிறகு அதன் கீழ்ப்பகுதியில் வலப்புறம் இருந்து இடப்புறம் கொக்கி போன்ற வடிவத்தில் இந்தக் குறியீடு போட வேண்டும்.
क + उ = क + ु =कु
म + उ = म + ु = मु
र + उ = र + ु = रु
स + उ = स + ु =सु
ஹிந்தி வார்த்தைகளைப் படிக்கும்போது ஒரு எழுத்தின் கீழ்ப்புறம் ु இந்தக் குறியீடு இருந்தால் அந்த எழுத்தோடு उ என்னும் உயிரெழுத்து சேர்ந்துள்ளது என்று அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.
மேலுள்ள எழுத்துக்காட்டுகளில் மூன்றாவது எடுத்துக்காட்டைக் கவனித்தீர்களா? र என்னும் மெய் எழுத்துடன் उ என்னும் உயிர் எழுத்து சேரும்போது 'उ மாத்ரா ु' வானது எவ்வாறு இடப்பட்டுள்ளது என்பதைக் கவனித்தீர்களா? ु என்னும் குறியீடானது र இன் கீழ்ப்புறம் அல்லாமல் வலப்புறம் இடப்பட்டுள்ளது. மற்ற மெய் எழுத்துக்களைப் போல் அல்லாமல் र என்னும் மெய் எழுத்து மட்டும் விதி விலக்காகும். र என்னும் மெய் எழுத்துடன் उ மற்றும் ऊ என்னும் உயிரெழுத்துக்கள் சேரும்போது மட்டும் இயல்பாக அல்லாமல் உயிரெழுத்தின் மாத்ரா-வானது வலப்புறம் இடவேண்டும். र இந்த மெய் எழுத்து தமிழின் 'ர' க்கு இணையானதாகும்.
இப்போது उ வின் மாத்ராவை உபயோகித்து சில வார்த்தைகளைக் காண்போம்.
दुकान
जुबान
गुलाब
இந்த வார்த்தைகளில் उ வை அடையாளம் காண முடிகிறதா.. முதல் எழுத்தின் கீழே उ வின் மாத்ராவும் இரண்டாவது எழுத்தின் கீழே आ வின் மாத்ரா உள்ளதைக் கவனித்தீர்களா. நீங்கள் முன்பே படித்த எழுத்துக்கள் எங்கேயாவது தென்பட்டால் அதையும் கண்டு நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.
ऊ
இது அடுத்த உயிரெழுத்தாகும். இதை उ வின் நெடில் என்று சொல்லலாம். இந்த எழுத்தின் உச்சரிப்பு தமிழில் உள்ள 'ஊ' வை போன்றது. அதாவது 'ஊர்' 'ஊசி' என்பதில் உள்ள 'ஊ' வைப்போல உச்சரிக்கப்படுகிறது.
இதனை எழுதுவது எப்படி என்பது படத்தில் காட்டப்பட்டுள்ளது.
முதலில் उ எழுதி அதன் மையத்தில் இருந்து வலப்புறம் ஒரு வளைவு போட வேண்டும்.
ऊ வானது மெய் எழுத்துக்களோடு சேரும்போது மெய் எழுத்தின் கீழ்ப்புறம் ऊ மாத்ரா - ू இட வேண்டும்.
क + ऊ = क + ू =कू
म + ऊ = म + ू = मू
र + ऊ= र + ू = रू
स + ऊ = स + ू =सू
उ மாத்ராவுக்கும் ऊ மாத்ராவுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டு கொள்ளுங்கள். उ மாத்ராவானது வலப்புறம் இருந்து இடப்புறம் போடப்படும், வளைவின் மேல்ப்பகுதி திறந்திருக்கும்.ऊ மாத்ராவானது இடப்புறம் இருந்து வலப்புறம் போடப்படும், இதில் வளைவின் கீழ்ப்பகுதி திறந்திருக்கும். இரண்டு மாத்ராவுமே கடிகார முள் திசையில்தான் (Clockwise Direction) எழுதப்படும். ऊ மாத்ரா எவ்வாறு எழுத வேண்டும் என்பது படத்தில் காட்டப்பட்டுள்ளது. उ மற்றும் ऊ வின் மாத்ரா 'ु, ू' எழுதும் போது சுழி போட்டு ஆரம்பித்தும் எழுதலாம், கொக்கிபோல போட்டும் எழுதலாம். போதுவாக அச்சடிக்கப்பட்ட எழுத்துக்களில் கொக்கிபோல மாத்ரா இருக்கும், எழுதப்பட்ட எழுத்துக்களில் சுழி போட்டு எழுதப்பட்டிருக்கும். கொக்கி போல போட்டு எழுதினாலும் தவறு ஒன்றுமல்ல, சொல்லப்போனால் அதுதான் அழகாக இருக்கும்.
முன்பே சொன்னதுபோல र என்னும் மெய் எழுத்துடன் ऊ மாத்ரா சேரும்போது வழக்கம்போல் அல்லாமல் ऊ மாத்ரா வலப்புறம் இடப்படும்.
र என்னும் மெய் எழுத்துடன் उ மற்றும் ऊ சேரும்போது எவ்வாறு வேறுபடும் என்பதை மட்டும் கவனித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது ஒன்றும் கடினமல்ல. தமிழில் 'உ', 'ஊ' என்னும் உயிரெழுத்துக்கள் மெய் எழுத்துக்களோடு சேரும்போது அதன் மாத்ராவானது பல வடிவங்களில் மாறும். ஒவ்வொரு மெய் எழுத்துக்கும் வேறு வேறு குறியீடு உபயோகிக்கப் படும். உதாரணமாக கு, ஙு, சு, ஞு, டு, ணு, து, நு,.. மற்றும் கூ, ஙூ, சூ, ஞூ, டூ, ணூ,..
ஆனால் ஹிந்தியில் र என்னும் ஒரு மெய் எழுத்து மட்டும் उ மற்றும் ऊ வோடு சேரும் போது சற்று வேறுபடும். மற்ற அனைத்து மெய் எழுத்துக்களுக்கும் இயல்பான முறையிலேயே மெய் எழுத்துக்களோடு உயிரெழுத்தின் குறியீடு சேர்க்கப்படும். மற்ற அனைத்து உயிரெழுத்துக்களும் இதே போல ஒரே மாதிரிதான் குறியீடுகள் அமையும்.
இப்போது ऊ மற்றும் அதன் மாத்ராவை வைத்து சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
ऊदा - ஊதா - ஊதா
ऊपर - ஊபர் - மேலே
ऊँट - ஊண்ட் - ஒட்டகம்
जूता - ஜூதா - காலணி
फूल - ஃபூல் - பூ
रूई - ரூஈ - நூல்
மேலே உள்ள வார்த்தைகளில் ऊ மற்றும் அதன் மாத்ராவை அடையாளம் கண்டுகொண்டு விட்டீர்கள் அல்லவா.. முதல் மூன்று வார்த்தைகளின் ஆரம்பத்தில் ऊ உள்ளது. மற்ற வார்த்தைகளில் ऊ வின் மாத்ரா உள்ளது.
ऊँट என்னும் வார்த்தையின் மேலே இருக்கும் வளைவு மற்றும் புள்ளி ' சந்த்ரபிந்து' என்று சொல்லப்படும். இதனை பற்றி விரிவாக இன்னொரு பதிவில் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக